உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரை

மாநகராட்சி வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரை

ஆவடி, குப்பை கழிவுகள் எரிந்த சம்பவத்தில், குப்பை அகற்றும் மாநகராட்சி வாகனம் உட்பட, மூன்று வாகனங்கள் தீக்கிரையாகின.சென்னை ஆவடி, பெரியார் நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அகற்றும், ‛டாட்டா ஏஸ்' வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று மதியம், 3 மணி அளவில், அங்கு குவிந்திருந்த குப்பை கழிவில் தீ பிடித்து எரிந்தது. அப்போது அங்கிருந்த மாநகராட்சி வாகனம் மற்றும் தனியாருக்கு சொந்தமான 2 வாகனங்கள் உட்பட, 3 வாகனங்கள் தீக்கிரையாகின. தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வாகனங்கள் முழுமையாக சேதமடைந்தன. இது குறித்து, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ