உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லிப்ட் கொடுத்து போன் பறித்த இருவர் கைது

லிப்ட் கொடுத்து போன் பறித்த இருவர் கைது

கிண்டி:மதுரையை சேர்ந்தவர் ஹரிபாலா, 21. ஜாபர்கான்பேட்டையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.கடந்த 1ம் தேதி அதிகாலை, கிண்டி நோக்கி செல்ல, சாலையோரம் நின்று கொண்டிருந்தார். ஒரு இருசக்கர வாகனத்தை கைகாட்டி 'லிப்ட்' கேட்டார்.வாகனத்தில் வந்த நபர், கிண்டி, நாகிரெட்டிதோட்டம் சென்றார். அங்கு, மற்றொரு நபருடன் சேர்ந்து, ஹரிபாலாவை சரமாரியாக தாக்கி, அவர் மொபைல் போனை பறித்து தப்பினர்.கிண்டி போலீசார் விசாரணையில், சைதாப்பேட்டையை சேர்ந்த ஆசிக், 19, சுந்தர், 23, என தெரிந்தது. நேற்று, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை