| ADDED : டிச 30, 2025 05:46 AM
பாரிமுனை: பாரிமுனையில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவுடன் வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பாரிமுனை பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று பாரிமுனை, ராஜாஜி சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு சுற்றித்திரிந்த வாலிபர்களின் கார், ஸ்கூட்டரை சோதித்ததில், விலை உயர்ந்த ஓ.ஜி., வகை கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து, வீராசாமி தெருவைச் சேர்ந்த அமீருதீன், 36, திருவொற்றியூர், மல்லிகாபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார், 29, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டரை கிலோ கஞ்சா, கார், ஸ்கூட்டர், மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.