உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாநகர பஸ்களுக்கு முன்னுரிமை பிரசாரத்தை துவக்கினார் உதயநிதி

 மாநகர பஸ்களுக்கு முன்னுரிமை பிரசாரத்தை துவக்கினார் உதயநிதி

சென்னை: 'மாநகர பேருந்துகளுக்கு முன்னுரிமை' என்ற பிரசாரத்தை, துணை முதல்வர் உதயநிதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். மாநகர போக்குவரத்து கழகம், 'மக்களே... உங்க கிட்ட ஒன்று சொல்லணும்' எனக்கூறி, ஒரு மாதத்துக்கும் மேலாக தன் எக்ஸ் பக்கத்தில் விளம்பரம் செய்து வந்தது. இது, என்னவாக இருக்கும் என, பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்ப எழுந்தது. இதற்கிடையே, 'மாநகர பேருந்துகளுக்கு முன்னுரிமை' என்ற பிரசாரத்தை, துணை முதல்வர் உதயநிதி, அண்ணாசதுக்கம் பேருந்து முனையத்தில் நேற்று மாலை துவக்கி வைத்தார். மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 'சென்னை தினம்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகர போக்குவரத்து கழக வரலாறு, சாதனைகள் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், நடமாடும் கண்காட்சி பேருந்தும் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தயாநிதி எம்.பி., போக்குவரத்துத் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர். குடியிருப்பு திறப்பு சேத்துப்பட்டு, மயிலாப்பூர் பகுதிகளில், 89.70 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட 584 அடுக்குமாடி குடியிருப்புகளை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்து, பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை