உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரங்கு தப்பிய அதிர்ச்சியில் வண்டலுார் ஊழியர் பலி

குரங்கு தப்பிய அதிர்ச்சியில் வண்டலுார் ஊழியர் பலி

தாம்பரம்,வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டன. இதில், இரண்டு குரங்குகள் நேற்று முன்தினம் காலை, உணவு வைக்கும் போது, கூண்டில் இருந்து தப்பித்து காட்டுப்பகுதிக்கு சென்றன.அப்போது, ஜான் என்ற நிரந்த ஊழியரும், சுகுணா, 45, என்ற தற்காலிக பெண் ஊழியரும் பணியில் இருந்தனர். இரண்டு நாட்களாகியும், குரங்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை. மன உளைச்சலில் இருந்த சுகுணா, நேற்று காலையில் இருந்து உணவு அருந்தாமல் இருந்துள்ளார். நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்தார். செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சுகுணா இறந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை