வில்லிவாக்கம் - ஐ.சி.எப்., மினி பஸ் இயக்க கோரிக்கை
வில்லிவாக்கம்,வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட மினி பேருந்தை கூடுதலாக ஐ.சி.எப்., வரை இயக்க கோரிக்கை வலுத்துள்ளது.இது குறித்து, பயணி ரா.கிட்டு, 60, என்பவர் கூறியதாவது:வில்லிவாக்கம் பேருந்து நிலையம், தற்காலிகமாக ஐ.சி.எப்.,வுக்கு மாற்றப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளதால், வில்லிவாக்கத்தில் இருந்து எம்.டி.எச்., சாலைக்கு செல்லவும், ரயில் நிலையம் மற்றும் ஐ.சி.எப்., பேருந்து நிலையங்களுக்கு செல்லவும் குறைந்தபட்சம், 50 - 100 ரூபாய் வரை ஆட்டோவிற்கு செலவாகிறது.வில்லிவாக்கத்தில் இருந்து, சிற்றுந்துகள் சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இயக்கப்படுகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து, வழித்தடம் எண் '43, 44' என்ற சிற்றுந்துகள், வில்லிவாக்கம் வரை இயக்கப்படுகின்றன.இதில், புதுார் - வில்லிவாக்கம் செல்லும் '43' வழித்தடம் பேருந்து, வில்லிவாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், புதிதாக மாற்றப்பட்ட ஐ.சி.எப்., பேருந்து நிலையத்திற்கு செல்ல, மீண்டும் மற்றொரு பேருந்து அல்லது ஆட்டோவை தேட வேண்டிய நிலை நிலவுகிறது.அதேசமயம். ஜி.கே.எம்., காலனி - ஐ.சி.எப்., செல்லும் 44 வழித்தட சிற்றுந்து ஒன்று மட்டுமே இருப்பதால், பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, 43 வழித்தட சிற்றுந்தை, வில்லிவாக்கத்தில் இருந்து ஐ.சி.எப்., வரை இயக்கவும், கூடுதல் சிற்றுந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.