மேலும் செய்திகள்
ஆவடியில் 4 இன்ஸ்., இடமாற்றம்
3 minutes ago
செய்திகள் சில வரிகளில்
5 minutes ago
ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
8 minutes ago
தி.மு.க., மோசடி: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
8 minutes ago
சென்னை: புழல் ஏரிக்கரையை ஆக்கிரமித்து புதுாரில் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதாக, நம் நாளி தழில் நேற்று வெளியான செய்திக்கு, 'நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட இடத்தில் தான் அக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது' என, அரசுக்கு நீர்வளத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அம்பத்துார் அடுத்த, சண்முகபுரம் அருகே புழல் ஏரிக்கரை மற்றும் செங்குன்றம் - அம்பத்துார் சாலையை ஆக்கிரமித்து புதுார் காவல் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி, இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இது குறித்து ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும்படி, தலைமை செயலர் முருகானந்தம் அலுவலகத்தில் இருந்து நீர்வளத் துறை செயலருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கொசஸ்தலையாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், அங்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நீர்வளத்துறை பராமரிப்பில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கிய ஏரியாக புழல் உள்ளது. இது 20.8 சதுர கி.மீ., பரப்பளவில் சென்னை மாவட்டத்தில் அம்பத்துார், மாதவரம் தாலுகாவிலும், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பொன்னேரி தாலுகாவிலும் அமைந்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி புழல் ஏரிக்கரை மற்றும் நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து புதுார் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது எனவும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கட்டுவதால் பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதாகவும் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ள இடமானது, மாதவரம் தாலுகா சூரப்பட்டு கிராமத்தில், புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு எல்லையை ஒட்டி, அம்பத்துார் - செங்குன்றம் சாலையிலும் உள்ளது. இந்த சாலை, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. அங்கு, நெடுஞ்சாலைத் துறை இடத்தில் புதுார் காவல் நிலையம் அமைந்துள்ளது. புழல் ஏரியின் இடத்தில் அமையவில்லை. ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, துறையின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில், விளக்கம் அனுப்பப் பட்டுள்ளது.
3 minutes ago
5 minutes ago
8 minutes ago
8 minutes ago