உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., சார்பில் நலதிட்ட உதவிகள்

தி.மு.க., சார்பில் நலதிட்ட உதவிகள்

ஓட்டேரி, ''இந்தியாவில் முதலீடு செய்ய நினைத்தால், முதலில் தமிழகத்தின் கதவைத் தான் முதலீட்டாளர்கள் தட்டுவர்,'' என, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார்.ஓட்டேரி, செல்லப்பா தெருவில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அப்பள தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் பண உதவி வழங்கி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:உலகமே அறியும் வகையில், திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க., மட்டும் தான் மக்களுக்கான இயக்கம். 10 ஆண்டு காலம் இருண்ட ஆட்சியில் இருந்த தமிழகம் மீண்டுள்ளது.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, மூன்று ஆண்டுகளில் மட்டும், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்தில் ஈர்க்கப்பட்டுள்ளது.இந்தியாவில் முதலீடுகள் எங்கு வர நினைத்தாலும், முதலீட்டாளர்கள் முதலில் தமிழகத்தின் கதவைத் தான் தட்டுகின்றனர். ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களுக்காகவே தி.மு.க., இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை