உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.1.25 கோடி பணம் ஏமாற்றிய பெண்ணின் மருமகன், நண்பன் கைது

 ரூ.1.25 கோடி பணம் ஏமாற்றிய பெண்ணின் மருமகன், நண்பன் கைது

வியாசர்பாடி: வியாசர்பாடியைச் சேர்ந்த தேவி, 38, என்பவர், அப்பகுதி மக்களிடம் தீபாவளி பண்டு சீட்டு பிடித்துள்ளார். மொத்தம் 1,300 பேரிடம் தலா 1,300 ரூபாய் வீதம் 12 மாதங்களுக்கு 2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளார். இதில் 500 பேருக்கு மட்டும், உறுதியளித்தபடி ஒரு கிராம் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளார். மற்றவர்களுக்கு தர வேண்டிய 1.25 கோடி ரூபாயையும், பொருட்களையும் தரவில்லை. இந்நிலையில் சீட்டு பிடித்த தேவியின் மருமகன் லோகேஷ், 27, எம்.கே.பி.நகருக்கு வந்தார். வியாசர்பாடி பகுதிமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அவரையும், அவருடன் வந்த முரளி, 30, என்பவரையும், அவர்கள் வைத்திருந்த 10.40 லட்சம் ரூபாயையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லோகேஷ், முரளி, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி