உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

 வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

திருவொற்றியூர்: வீடு புகுந்து, நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவொற்றியூர், ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் 40. இவர், வீட்டின் முதல் தளத்தில், 'ஆஸ்பெட்டாஸ் ஷீட்' போட்ட கட்டடத்தில், குடும்பத்துடன் வசிக்கிறார். தரைத்தளத்தில் இவரது தாய் வசிக்கிறார். கடந்த 1ம் தேதி இரவு, பெய்த மழையால், ராஜேஷ் குடும்பத்துடன் தரைத்தளத்தில் தங்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, ' ஆஸ்பெட்டாஸ் ஷீட்' போட்ட வீட்டினுள் இருந்த, 1.5 சவரன் நகை திருடு போனது. விசாரித்த சாத்தாங்காடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னகுமார், 32, என்பவரை, நேற்று மாலை கைது செய்து, நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை