உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீரசிவாஜி பிறந்த நாள் விழா

வீரசிவாஜி பிறந்த நாள் விழா

வால்பாறை : இந்து முன்னணி சார்பில் வீரசிவாஜியின் பிறந்த நாளையொட்டி வால்பாறை டவுன் பகுதியில் பத்து இடங்களில் கொடியேற்றுவிழா மற்றும் தெருமுனை பிரசாரக்கூட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன் நடந்தது.இந்து முன்னணி பொதுசெயலாளர் சபரீஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு இடங்களில் கொடியேற்றி வைத்து இந்து முன்னணி மாநில பேச்சாளர் செங்காளியப்பன் பேசினார்.காந்திசிலை, புதிய பஸ் ஸ்டாண்டு, ஸ்டேன்மோர் பிரிவு, நகராட்சி அலுவலகம், கக்கன்காலனி ஆகிய இடங்களில் தெருமுனைப்பிரசாரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி