உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலில் பக்தரின் நகை அபேஸ்

கோவிலில் பக்தரின் நகை அபேஸ்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் கோவிலுக்குள் பெண் பக்தர் கழுத்தில் அணிந்திருந்து தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த மரப்பேட்டை வீதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி சந்திரா(57). இவர் நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு பொள்ளாச்சி கடைவீதி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். சுவாமி தரிசனம் முடித்து கோவிலுக்கு வெளியே வந்த போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.5 பவுன் தங்க சங்கிலி காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தும் தங்க சங்கிலி கிடைக்கவில்லை. இதுபற்றி பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் வளாகத்தில் விசாரித்தனர். ஆனால், கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் யார் மீதும் சந்தேகப்பட்டு விசாரிக்க முடியாமல் போலீசார் தடுமாறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை