உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்னிவீர் திட்டம் சரியில்லையென்று? யாரு சொன்னதுங்க?வேலை, கல்வி, சம்பளம் உத்தரவாதம்முன்னாள் ராணுவ அதிகாரி பட்டியல்

அக்னிவீர் திட்டம் சரியில்லையென்று? யாரு சொன்னதுங்க?வேலை, கல்வி, சம்பளம் உத்தரவாதம்முன்னாள் ராணுவ அதிகாரி பட்டியல்

கோவை;அக்னிவீர் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம் பொய்யானது. வேலைவாய்ப்புக்கும், கல்விக்கும் உத்தரவாதம் அளிக்கும், மிகப்பெரும் திட்டத்தை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பா.ஜ., ராணுவத்தினர் பிரிவு முன்னாள் மாநில தலைவர் ராமன் தெரிவித்தார்.இதுதொடர்பாக, கோவை யில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அக்னிவீர் திட்டத்தைப் பற்றி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர். அக்னிவீர் திட்டம், இளைஞர்களுக்கு வரப்பிரசாதம். 17.5 வயதில் அக்னிவீர் திட்டத்தில் இணையலாம். முதல் ஆண்டு மாதம் ரூ.30 ஆயிரம், என படிப்படியாக 4ம் ஆண்டு 40 ஆயிரம் ரூபாய்சம்பளம் கிடைக்கும். 4 ஆண்டு முடிவில், ரூ.10.71 லட்சம் பணிக்கொடை கிடைக்கும்.

ரூ.20 லட்சம் கிடைக்கும்

பணிக்காலத்தில் உணவு, இருப்பிடம், போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசம் என்பதால், ஊதியத்தைச் சேமிக்கலாம். அவர் 4 ஆண்டுக்குப் பின் வெளியே வரும்போது, 20 லட்சம் ரூபாயுடன் வரலாம். இப்பணத்தை வைத்து அவர் தொழில் துவங்கவோ, சொந்த வீடு கட்டவோ முடியும்.பணியின் போதே பட்டப்படிப்பு பயில, இக்னோ பல்கலை.,யுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 5 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இன்ஜி., கல்லூரியில், லேட்டரல் என்ட்ரி முறையில் சேர முடியும். பணிப்பாதுகாப்பு இல்லை என்ற, தவறான வாதம் முன்வைக்கப்படுகிறது. முப்படைகளில் சேர, திறனுள்ள 25 சதவீதம் பேருக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உள்துறை அமைச்சகத்துடனான ஒப்பந்தப்படி, அசாம் ரைபிள்ஸ், சி.ஐ.எஸ்.எப்.,- சி.ஆர்.பி.எப்., உட்பட ஏழு வகையான துணை ராணுவப் படைகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.

பணி பாதுகாப்பும் உண்டு

கடலோரக் காவல் படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு லட்சம் அக்னிவீரர்களில், 55 ஆயிரம் பேர் வரை பணிப்பாதுகாப்பு பெறுகின்றனர்.மாநில காவல் துறையிலும் இட ஒதுக்கீடு உண்டு. தமிழகத்தில் மட்டும் தி.மு.க., அரசு தர மறுக்கிறது. இந்திய ரயில்வே போலீஸ், பாதுகாப்புத்துறையுடன் தொடர்புடைய பொதுத்துறை நிறுவனங்களிலும், இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களும், வேலை வழங்க முன்வருகின்றன. இதனால், கிட்டத்தட்ட 100 சதவீத அக்னிவீரர்களுக்கும், வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தேசபக்தி, ஒழுங்கை வளர்க்கும் அக்னிவீர் திட்டம் குறித்து, எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பக்கூடாது. தமிழக இளைஞர்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பா.ஜ., மாநகர், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார், பா.ஜ., ராணுவ வீரர் பிரிவின் மாவட்ட செயலாளர் செல்வம், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை