உள்ளூர் செய்திகள்

சம்மேளன துவக்க விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பி.ஏ., பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியில், தகவல் தொழிற்நுட்பத் துறையின் சம்மேளனம் துவக்க விழா நடந்தது. அமெரிக்காவிலுள்ள ஆக்லேண்டு பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரமணியம் கணேசன், சம்மேளனத்தை துவக்கி வைத்தார். பி.ஏ., பொறியியல் கல்லூரி தாளாளர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். தகவல் தொழிற்நுட்பத் துறையின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், சந்திக்கவுள்ள சவால்கள், மாணவர்கள் தயார்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மணிகண்டன், துணைத் தலைவர் தேவராஜன், கல்லூரி நிர்வாக அலுவலர் பழனிசாமி, தகவல் தொழிற்நுட்பத் துறை தலைவர் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை