உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவ காப்பீடு நிராகரிப்பு ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் புகார்

மருத்துவ காப்பீடு நிராகரிப்பு ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் புகார்

அன்னுார்;'பெரும்பாலான மருத்துவ காப்பீடு நிராகரிக்கப்படுகிறது,' என, பென்ஷனர்கள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தாலுகா கிளை கூட்டம் அன்னுாரில் நடந்தது. சங்கத்தின் வட்ட கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.மாவட்டத் துணைத் தலைவர் இளவரசு பேசுகையில், பென்ஷனர்களின் மருத்துவ காப்பீடு பெரும்பாலான மருத்துவமனைகளில் நிராகரிக்கப்படுகிறது. இவற்றிற்கு பணமில்லா மருத்துவம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.செயலாளர் பொன்னுசாமி வேலை அறிக்கையும், பொருளாளர் சுவாமியப்பன் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். கூட்டத்தில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை, அன்னுார் வரை விரிவு படுத்த வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களின் பென்ஷன் தொகையை, 7,850 ரூபாயாக உயர்த்த வேண்டும்.ரயில் மற்றும் பஸ்களில் சலுகை அல்லது இலவச பயணம் செய்ய முதியோருக்கு அனுமதி அளிக்க வேண்டும். 70 வயதை கடந்த பென்ஷனர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும்.பணம் இல்லா மருத்துவம் பெற காப்பீடு திட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குன்னத்தூராம்பாளையம் குளத்தில் கழிவு நீர் கலக்கும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் துணைத் தலைவர் பழனியப்பன், இணை செயலாளர் முருகசாமி, சத்துணவு ஊழியர் சங்க வட்டார தலைவர் திலகம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி