உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 10,123 மரக்கன்று நட முடிவு மாநகராட்சி கமிஷனர் தகவல்

10,123 மரக்கன்று நட முடிவு மாநகராட்சி கமிஷனர் தகவல்

கோவை;பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், கோவையில் மரக்கன்று நடும் பணியை, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று, துவக்கி வைத்தார்.கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்த கமிஷனர் கூறுகையில், ''சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மாநகராட்சி பூங்காக்கள், குளக்கரை, நீர்வழித்தடங்களின் கரைகள் என, 264 இடங்களில், வேம்பு, பூவரசன், புங்கன், நாவல் என, 10 ஆயிரத்து, 123 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், உதவி கமிஷனர் (பொ) இளங்கோவன், உதவி நிர்வாக பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ