| ADDED : மார் 28, 2024 11:16 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், வேட்புமனு தாக்கல், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்திலும், கோவை டி.ஆர்.ஓ., அலுவலகத்திலும் நடந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா முன்னிலை வகித்தார். அதில், 29 வேட்பாளர்கள், 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், 18 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது; 11 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - பகுஜன் சமாஜ் கட்சி - நாம் தமிழர் கட்சி, - புதிய தலைமுறை மக்கள் கட்சி உள்ளிட்ட வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தவிர, 12 சுயே., வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டன.நாளை, 30ம் தேதி வரை மனு வாபஸ் பெறலாம். அதன்பின், சின்னம் ஒதுக்கீடு செய்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.