உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிரியர்கள் 2000 பேர் தற்செயல் விடுப்பு: முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பு  

ஆசிரியர்கள் 2000 பேர் தற்செயல் விடுப்பு: முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பு  

கோவை;கோவையில் இருந்து, 2000 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, சென்னையில் நடக்கும் ஆசிரியர் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்'' என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வீராசாமி தெரிவித்துள்ளார்.துக்கக்கல்வித்துறையின், 243 வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல் படுத்த வேண்டும் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்குள் உள்ள ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, துவக்ப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) மற்றும் ஆரம்பப்பபள்ளி ஆசியரியர் கூட்டணி சார்பில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு, தமிழகம் முழுவதும் இருந்து சென்று, 5000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆசிரியர்களின் இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாக, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை போலீசார் முன் கூட்டியே கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள் 2000 க்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர். இந்த ஆசிரியர்கள் நாளை சென்னையில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.இது குறித்து, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் மாநிலத்தலைவர் மணிமேகலை கூறியதாவது:ஆசிரியர்களை பொறுத்தவரை எங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுத்தி போராட்டம் நடத்துகிறோம். ஆனால் அரசு இந்த போராட்டத்தை முடக்கும் வகையில், போலீசாரை வைத்து கைது செய்து வருகிறது. பள்ளியில் பணியில் இருக்கும் ஆசிரியர்களை பள்ளிக்கே சென்று கைது செய்து வருகின்றனர். கிரிமினல் குற்றவாளிகளை நடத்துவது போல் போராட்த்தில் ஈடுபடும் ஆசிரியர்களை நடத்தி வருகின்றனர். எங்களின் பிரதான கோரிக்கை, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும். 243 வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்குள் உள்ள ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தி வருகிறோம். இதை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு, அவர் கூறினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்ட செயலாளர் வீராசாமி கூறுகையில், கோவை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்க விடாமல் போலீசார் வீட்டில் வைத்து கைது செய்து வருகின்றனர். நாளை (இன்று) கோவையில் இருந்து 2000 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கொண்டு சென்னையில் நடக்கும் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்'' என்றார்....படங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை