உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 450 சவரன் நகை கருவூலத்தில் ஒப்படைப்பு

450 சவரன் நகை கருவூலத்தில் ஒப்படைப்பு

கோவை;பீளமேடு, பி.எஸ்.ஜி., எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ். இவர், மின் காற்றாலை அலுவலகம் நடத்தி வருகிறார். சேலத்தை சேர்ந்த அஸ்வின் குமார், சிவகுமார், வசந்த் ஆகியோர் சிவராஜ் அலுவலகத்தில் பணியாற்றினர்.இவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து, சிவராஜ் பெயரிலுள்ள 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அஸ்வின்குமார் பெயருக்கு மாற்றியதோடு, அவரது வங்கி கணக்கிலிருந்து பல கோடி பணம் மற்றும் நகையை அபகரித்தனர்.இதையறிந்த சிவராஜ் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, சிவக்குமார், வசந்த் மற்றும் உடந்தையாக இருந்த அஸ்வின்குமார் மனைவி ஷீலா, மகள் தீக் ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 12 கோடி ரூபாய், 450 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். அஸ்வின்குமார் உட்பட 8 பேரை தேடி வருகின்றனர்.அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 3.20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 450 சவரன் நகையை, கோவை, ஜே.எம்:7, கோர்ட்டில் போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.இந்த நகைகளை, கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க மாஜிஸ்திரேட் சுஜித் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி