உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களுடன் முதல்வர் முகாமில் 600 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் முகாமில் 600 மனுக்கள்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், மக்கள் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில், மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து, நான்காவது முகாமாக கிணத்துக்கடவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அரசம்பாளையம், கோடங்கிபாளையம், கொண்டம்பட்டி மற்றும் சொலவம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடந்தது.இதில்,மாவட்ட துணை கலெக்டர் முருகேசன், கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு மற்றும் பலஅரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில், 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை