| ADDED : ஆக 04, 2024 05:44 AM
கோவை : தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படுகின்றன. ஆடிப்பெருக்கு தினம் என்பதால், பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் முன்வருவர். அதற்காக, நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தமிழக அரசு அறிவுறுத்தியது.கோவை மாவட்டத்தில் உள்ள, 17 பத்திரப்பதிவு அலுவலகங்களும் நேற்று செயல்பட்டன. கோவை வடக்கில், 462 பத்திரங்கள் பதிவு செய்த வகையில், ஏழு கோடியே, 45 லட்சத்து, 98 ஆயிரத்து, 33 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்தது.கோவை தெற்கில், 368 பத்திரங்கள பதிவு செய்த வகையில், மூன்று கோடியே, ஏழு லட்சத்து, 53 ஆயிரத்து. 422 ரூபாய் வருவாய் கிடைத்து. மொத்தமாக, 830 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.இவ்வகையில் மட்டும், 10 கோடியே, 53 லட்சத்து, 51 ஆயிரத்து, 455 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்திருப்பதாக, பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.