உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களுடன் முதல்வர் முகாமில் 846 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் முகாமில் 846 மனுக்கள்

தொண்டாமுத்தூர்: செல்லப்பகவுண்டன்புதூரில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில், 846 மனுக்கள் பெறப்பட்டன.பேரூர் தாலுகாவிற்குட்பட்ட ஊரக பகுதிகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடந்து வருகிறது. இந்நிலையில், பேரூர் தாலுகாவிற்குட்பட்ட தீத்திபாளையம் மற்றும் மாதம்பட்டி ஊராட்சிகளுக்கான, மூன்றாவது மக்களுடன் முதல்வர் முகாம், செல்லப்பகவுண்டன்புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமை, துணை கலெக்டர் துரைசாமி துவக்கி வைத்தார். 15 துறைகளை சேர்ந்த, 44 சேவைகள் வழங்கப்பட்டன. முகாமில் மொத்தம், 846 மனுக்கள் பெறப்பட்டன. வரும், 28ம் தேதி, மத்வராயபுரம் மற்றும் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம், செம்மேட்டில் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி