உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்து சீரமைக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு

போக்குவரத்து சீரமைக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு

கோவை:கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட தன்னார்வலர்கள், ஆசிரியர்களுக்கு, போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து, மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மாநகர போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து, போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடும், டிராபிக் வார்டன் அமைப்பு லாப நோக்கம் இல்லாத, தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில், ஈடுபட தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு கோவையில் வசிப்பவராக இருக்க வேண்டும். 25ல் இருந்து, 45 வயதுக்குள் இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் வயது வரம்பில் விலக்கு உண்டு. சேவை மனப்பான்மையோடு, மூன்று மணி நேரம் சேவை செய்ய இயன்றவராக இருத்தல் வேண்டும்.குற்றப் பின்னணி இல்லாதவராக இருத்தல் அவசியம். அதேபோல, பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில், அவர்களது பள்ளி மற்றும் கல்லுாரியின் முன் போக்குவரத்தை சீர்செய்ய, டிராபிக் வார்டன்களாக வரவேற்கப்படுகிறார்கள்.விண்ணப்பங்களை, கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகம் மற்றும் டிராபிக் வார்டன் அலுவலகத்தில், நாளை, (28ம் தேதி) காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணிக்குள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 99941 85221 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை