மேலும் செய்திகள்
ஆறாவது நாளாக நர்ஸ்கள் போராட்டம்
1 minutes ago
கோவை:கோவையில் அரசு பள்ளிகளுக்கு இதுவரை, பள்ளி பராமரிப்பு இரண்டாம் தவணை தொகை விடுவிக்கப்படவில்லை, என தலைமையாசிரியர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பராமரிப்பு நிதி ஆண்டு தோறும் விடுவிக்கப்படும்.இந்நிதியை பயன்படுத்தியே, பள்ளிகளில் பல்வேறு பழுதுகள் சரி செய்தல், பராமரிப்பு பணிகள், கற்றல் உபகரணங்கள் கொள்முதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். கடந்த சில ஆண்டுகளாக, இந்நிதி, 50 சதவீதமாக பிரித்து இரண்டு தவணையில் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான முதல் தவணை தொகை கடந்த, அக்.,-நவ., மாதம் விடுவிக்கப்பட்டது. இரண்டாம் தவணை ஜன., மாதம் விடுவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கல்வியாண்டு முடியும் நிலையிலும், இதுவரை பராமரிப்பு நிதி வழங்கப்படவில்லை. அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'இரண்டாம் கட்ட தவணை நிதி ஜன., மாதம் வழங்கப்படும், அதனை மார்ச் 31ம் தேதிக்குள் செலவிட வேண்டியது அவசியம். பல பள்ளிகளில் அத்தியாவசியம் என்பதால், ஆசிரியர்கள் சொந்த செலவில் பல பணிகளை மேற்கொண்டுள்ளனர்.நிதி செலவிட இன்றே(மார்ச் 31) கடைசி நாள்; ஆனால், நிதி இதுவரை பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவில்லை. பல பராமரிப்பு பணிகள் நிலுவையில் உள்ளன' என்றார்.
1 minutes ago