உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் வந்து ஒரு மாசமாச்சு; போராட்ட களத்தில் புலியகுளம்

தண்ணீர் வந்து ஒரு மாசமாச்சு; போராட்ட களத்தில் புலியகுளம்

கோவை;புலியகுளம் பகுதியில் குடிநீர் வராததால், சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை, போலீசார் அழைத்து சென்று சமாதானம் செய்தனர்.கோவை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டமானது வேகமாக சரிந்து வருகிறது. இதனால், குடிநீர் வினியோக இடைவெளி, 15 நாட்களை தாண்டி வருகிறது.இச்சூழலில், மாநகராட்சி, 66வது வார்டு புலியகுளம் மெயின் ரோட்டை ஒட்டிய கல்லறை தோட்டம் அருகே வசிக்கும், 10க்கும் மேற்பட்டவர்கள் நேற்று குடிநீர் வராததை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.இதையறிந்த போலீசார், அருகே இருக்கும் புலியகுளம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் கிடைக்கவும், பாதிப்புகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, வீடுகளுக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை