உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் மரம் சாய்ந்தது மின் கம்பி துண்டானது

ரோட்டில் மரம் சாய்ந்தது மின் கம்பி துண்டானது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ரோட்டில், மரம் விழுந்ததில், மின் கம்பிகள் துண்டானது.ஆனைமலை அடுத்த கோட்டூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், அதிகப்படியான வாகன போக்குவரத்து உள்ளது. இந்நிலையில் வழித்தடத்தில் ரோட்டோரம் இருந்த மே பிளவர் மரம் ஒன்று திடீரென சாய்ந்து, அங்கிருந்த இரு மின் கம்பங்கள் மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் துண்டானது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மரம் கீழே விழுந்த போது அருகில் எவரும் இல்லாததால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.போக்குவரத்து தடைபட்டதால், மரக்கிளைகள் உடனடியாக வெட்டி அகற்றப்பட்டன. மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை