உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூண்டி கோவில் மண்டபத்தில் புகுந்த காட்டு யானை

பூண்டி கோவில் மண்டபத்தில் புகுந்த காட்டு யானை

தொண்டாமுத்தூர்;பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மண்டபத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை முகாமிட்டது.கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அடர் வனப்பகுதியில் கோவில் உள்ளதால், இங்கு, வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.நேற்றுமுன்தினம் இரவு, கோவிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. சுமார், மூன்று மணி நேரமாக, மண்டபத்திற்குள்ளேயே இருந்தது. வனத்துறையினர், வாழைப்பழத்தை காட்டி, மண்டபத்திற்குள் இருந்த யானையை வெளியே கொண்டு வந்து, வனப்பகுதிக்குள் விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்