உள்ளூர் செய்திகள்

ஆடிப்பூர விழா

அன்னுார் : ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம் பூர நட்சத்திர நாளன்று ஆடிப்பூரவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில், நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதை அடுத்து ஆண்டாளுக்கு அலங்கார பூஜை காலை 10:30 மணிக்கு நடந்தது. மதியம் 12:30 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் சாற்றுமுறை நடைபெற்றது. பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை