உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் அருகில் ஆவின் டீக்கடை; பக்தர்கள், குடியிருப்போர் எதிர்ப்பு 

கோவில் அருகில் ஆவின் டீக்கடை; பக்தர்கள், குடியிருப்போர் எதிர்ப்பு 

கோவை : கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக கோவில் அருகில் திறந்துள்ள ஆவின் டீக்கடையை அகற்ற, பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு கிழக்கு பாஷ்யகாரலு ரோடு கார்னரில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், பக்தர்களுக்கு இடையூறாக அங்கு ஆவின் டீக்கடை திறக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகம் என்ற பெயரில் டீ, காபி, போண்டா, வடை மற்றும் பீடி சிகரெட் உட்பட அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, டீக்கடையை உடனே அகற்ற வேண்டும் என, பக்தர்களும், அந்த வீதியில் குடியிருப்பவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த டீக்கடைக்காரர் முன்பு, இந்த கோவிலுக்கு எதிரில் டீக்கடை வைத்து இருந்தார். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததால், மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு, கடையை அகற்றினார். ஆறு மாதங்களுக்கு முன், மீண்டும் இங்கு வந்து கடை போட்டார். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி கமிஷனர் மற்றும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தோம். அதனால் கடையை திறக்கவில்லை. இப்போது, அரசியல்வாதிகள் உதவியுடன் டீக்கடையை திறந்துள்ளனர். இக்கடை மிகவும் இடையூறாக உள்ளதால், உடனே அகற்ற வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை