உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையை முறையாக அள்ளாத நிறுவனத்தை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்க அ.தி.மு.க,, முறையீடு

குப்பையை முறையாக அள்ளாத நிறுவனத்தை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்க அ.தி.மு.க,, முறையீடு

கோவை : கோவையில், குப்பை அள்ளும் தனியார் நிறுவனம் முறையாக பணிபுரியாததால், 'பிளாக் லிஸ்ட்'டில் சேர்க்க, அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.கோவை மாநகராட்சி பகுதியில், குப்பை சேகரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் குப்பை அள்ள, ரூ.3,140 வீதம், ஓராண்டுக்கு ரூ.172 கோடி வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், குப்பை மேலாண்மை மிகவும் மோசமாக இருக்கிறது; ஆங்காங்கே தேங்கியிருக்கிறது. பல இடங்களில் மாநகராட்சியின் நிரந்தர துாய்மை பணியாளர்கள், குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.இதுதொடர்பாக, அ.தி.மு.க., மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் விளக்கம் கேட்டு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம், நேற்று கடிதம் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் நிரந்தர துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என, 6,401 பேர் பணிபுரிகின்றனர். இதில், ஒப்பந்த நிறுவனத்திடம் பணிபுரியும் ஊழியர் விபரங்களை, ஆதார் எண்களுடன் பட்டியல் வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு வார்டிலும், எத்தனை பேர் பணிபுரிகின்றனர்; அவர்களது ஆதார் விபரம் மாநகராட்சி வசம் இருக்கிறதா, மாநகராட்சியின் வாகனங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தால், மாதந்தோறும் எவ்வளவு ரூபாய் வாடகை பெறப்படுகிறது, 'பயோமைனிங்' டெண்டரை இன்னும் இறுதி செய்யாமல் இருப்பது ஏன். இதற்கு முன், 'பயோமைனிங்' பணி சரிவர நடக்காததால், வெள்ளலுாரில் குப்பை கிடங்கில் தீ விபத்து நடந்ததா? ஓராண்டாக வார்டு பகுதிகளில், குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனம் சரியாக மேற்கொள்ளவில்லை; அந்நிறுவனத்தை 'பிளாக் லிஸ்ட்'டில் சேர்த்து, டெண்டரை ஏன் ரத்து செய்யக் கூடாது? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி