உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் அணித் தலைவர்கள் பதவியேற்பு

மாணவர் அணித் தலைவர்கள் பதவியேற்பு

கோவை;வெள்ளக்கிணறு, சி.பி.எஸ்.இ., பள்ளியான எஸ்.என்.எஸ்., அகாடமியில் பள்ளி மாணவர் அணித் தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சிக் கல்லுாரி அஜய் பரதன் ஐ.பி.எஸ்., தலைமைத்துவம் மற்றும் கடமையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பல்வேறு மாணவர் அணித் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் சிறப்பு உடை மற்றும் பேட்ஜ் அணிந்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் மோகன் நாராயண், பள்ளியின் முதல்வர் ஸ்ரீவித்யா பிரின்ஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை