உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செதில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த அறிவுரை

செதில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த அறிவுரை

கிணத்துக்கடவு:பயிர்களில் செதில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், விவசாய பயிர்களில் செதில் பூச்சிகள் இருப்பதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. சிலர், மாடி தோட்டம் அமைத்து காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மாடி தோட்டம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்கள், செதில் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சி தாக்குல் உள்ள இடத்தில் துணியில் வேம்பு எண்ணெய் நனைத்து தடவ வேண்டும். இதனால், அப்பகுதியில் உள்ள பூச்சிகள் அழிந்து விடும். மற்ற பகுதிக்கு பரவாது.விவசாய நிலத்தில் இந்த செதில் பூச்சிகள் இருப்பின், மீன் எண்ணெய், சோப்பு அமிலம் 10 லிட்டருக்கு, ஒட்டு பசையை 80 மில்லி கலந்து, பூச்சி தாக்குதல் உள்ள பகுதி நனையும் படி தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், பயிர்களில் செதில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அதிக மகசூல் பெற முடியும். இயற்கையான இந்த வழிகாட்டி முறையை கடைபிடித்து பயன்பெறலாம், என, வேளாண் பல்கலை பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ