கால்வாயை துார்வாரணும்!
உடுமலை ஸ்ரீ நகரில் செல்லும் மழைநீர் வடிகால் துார்வாரப்படாததால், குப்பை, கழிவுகள் தேங்கிக்கிடக்கிறது. இதனால், இதில் தண்ணீர் செல்ல முடியாமல் ரோட்டில் தேங்கிவிடுகிறது. எனவே, நகராட்சியினர் இந்த வடிகாலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன்குமார், உடுமலை. நடவடிக்கை வேண்டும்
கொமரலிங்கம் பகுதியில், பொது இடங்களிலும், நிழற்கூரையிலும் சிலர் புகை பிடித்து, சுற்றுச்சூழலை சுகாதார கேடாக்கி வருகின்றனர். இதனால், சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆறுமுகம், கொமரலிங்கம். நாய்த்தொல்லை
உடுமலை காந்திநகர் மலையப்ப கவுண்டர் லே அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதில், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடிவதில்லை. இதுகுறித்து நகராட்சியினர் தெருநாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திக், உடுமலை. ரோட்டில் ஆக்கிரமிப்பு
உடுமலை, பசுபதி வீதியில் வணிக கடைகளின் பொருட்கள் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்படுகின்றன. ரோட்டின் பாதி வரை கடைகளின் பொருட்களாக இருப்பதால் வாகனம் நிறுத்த இடமில்லாமல் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன. இதனால் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- ரங்கநாதன், உடுமலை. செடிகளை அகற்றணும்!
உடுமலை கழுத்தறுத்தான் பள்ளத்தில், தரைமட்டப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தையொட்டி, செடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. எனவே, இச்செடிகள், புதர்களை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜா, உடுமலை. ரோட்டில் கால்நடைகள்
வால்பாறை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரோட்டில் கால்நடைகள் அதிகமாக உலா வருகின்றன. இதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -முருகன், வால்பாறை. ஒளிராத தெருவிளக்குகள்
உடுமலை, பழனியாண்டவர் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளன. மாலை நேரங்களில் அவ்வழியாக செல்லும் மக்கள் திருட்டு பயத்துக்கு ஆளாகின்றனர். மேலும் இரவில் இருள் சூழ்ந்திருப்பதால், தெருநாய்கள் வாகன ஓட்டுநர்களை துரத்தி சென்று விபத்துக்குள்ளாக்குகின்றன.- ரேவதி, உடுமலை. போக்குவரத்து நெரிசல்
வால்பாறை நகரில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -சண்முகம், வால்பாறை. பாதாள சாக்கடை சீரமைக்கப்படுமா?
பொள்ளாச்சி கடைவீதி, இமான்கான் வீதி மற்றும் வெங்கட்ராமன் வீதி சந்திப்பில், பாதாள சாக்கடை தோண்டி ஒன்றரை மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்பட்டு தடுமாறி செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும்.-- -ரமேஷ், பொள்ளாச்சி. வாகனங்கள் வேகம்
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் வடக்கிபாளையம் பிரிவு பகுதியில், வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ரோட்டை சீரமைத்து, வாகன வேகத்தை குறைக்க தடுப்புகள் வைக்க வேண்டும்.- -டேவிட், பொள்ளாச்சி. வடிகால் அமைக்கணும்!
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், என்.ஜி.எம்., கல்லுாரி முன்பாக, மழை பெய்யும் நேரத்தில், தண்ணீர் தேங்குகிறது. மழை நீர் வடிந்து செல்ல போதுமான வடிகால் வசதி இல்லாததால், வாகன ஓட்டுநர்களும், பாதசாரிகளும், மாணவர்களும் பாதிக்கின்றனர். வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரதாப், பொள்ளாச்சி. வீணாகும் குப்பை தொட்டி
நெகமம், கோப்பனூர்புதூரில் குப்பை தொட்டியை முறையாக பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அதில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், குப்பை தொட்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, குப்பை தொட்டியை மாற்றியமைக்க வேண்டும்.- -கிரி பிரசாத், நெகமம்.