உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்ரி இன்டெக்ஸ் 2024 கண்காட்சி இன்று நிறைவு

அக்ரி இன்டெக்ஸ் 2024 கண்காட்சி இன்று நிறைவு

கோவை:கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) நடத்தும், அக்ரி இன்டெக்ஸ் 2024 கண்காட்சி, இன்று நிறைவு பெறுகிறது.கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், கடந்த 11ல் கண்காட்சி துவங்கியது. விவசாயிகள் திரளாக பங்கேற்று வருகின்றனர். இயந்திரங்கள், சொட்டுநீர் பாசனம், சோலார் மின்சாரம், கையடக்க கருவிகள், நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் மோட்டார்கள், உழவு கருவிகள், விவசாய உப தொழில் உபகரணங்கள், விளை பொருட்களை பதப்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன.வேளாண் அறிவுசார் கருத்தரங்குகள் நடந்தன. விவசாயிகள் வேளாண் சார்ந்த பொருளாதாரம், வேளாண் கூட்டமைப்புகள், சந்தைபடுத்துதல், கடன் வசதிகள் குறித்து அறிந்தனர்.கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. விவசாயிகளுக்கு அனுமதி இலவசம். பொதுமக்கள் 50 ரூபாய் செலுத்தி பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ