உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உக்கடம், சித்தாபுதுார் பகுதிகளில் ஏழைகள் 12 பேருக்கு வீடு ஒதுக்கீடு

உக்கடம், சித்தாபுதுார் பகுதிகளில் ஏழைகள் 12 பேருக்கு வீடு ஒதுக்கீடு

கோவை,;தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சித்தப்புதூர் மற்றும் உக்கடம் பகுதியில், 12 ஏழை மக்கள் 12 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான உத்தரவுகளை, கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சித்தப்புதூர் திட்டப்பகுதி மற்றும் உக்கடம் திட்டப்பகுதி ஆகியவற்றில், 12 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான உத்தரவுகளை, கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை