உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை

ஆனைமலை: ஆனைமலை அருகே, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும், சிற்றோடைகளின் வழியாகவும் நீர் வரத்து அதிகரிப்பால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், பாலாறு ஆஞ்சநேயர் கோவில் செல்லும் வழியில் உள்ள தரை மட்ட பாலம் நீரில் மூழ்கியது. நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள், அவசரம், அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின்,பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தற்காலிக தடை விதித்துள்ளது கோவில் நிர்வாகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை