உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லூரியில் 1,302 இடங்களில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை 131 காலியிடங்கள் அறிவிப்பு

அரசு கல்லூரியில் 1,302 இடங்களில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை 131 காலியிடங்கள் அறிவிப்பு

கோவை : கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்ட பொது கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 1,302 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 131 காலியிடங்கள் உள்ளன.அரசு கலைக் கல்லூரியில் துறை வாரியாக பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், 1,142 இடங்களில் 80 சதவீத மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து, 291 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 24 முதல் 26ம் தேதி வரை நடந்தது. இதில், அறிவியல், வணிகவியல், மொழிப் பாடப் பிரிவுகளில் 160 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,433 இடங்களில் 1,302 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 132 காலியிடங்கள் மீதமுள்ளன. இதில், இரண்டாம் சுழற்சியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் இயற்பியல், பாதுகாப்பியல் துறையில் அதிக காலியிடங்கள் உள்ளன.இதுகுறித்து, கல்லூரி முதல்வர் எழிலி கூறுகையில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் மொத்தம் 1,302 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. மீதமுள்ள 131 காலியிடங்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ