| ADDED : மே 23, 2024 11:19 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் மதுரை வீரன் கோவிலில் ஆண்டு விழா நடந்தது.கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் முனியப்பசுவாமி, பட்டத்தரசியம்மன், மதுரை வீரன் கோவிலில், 11ம் ஆண்டு விழா நிகழ்ச்சி, கடந்த 7ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.கடந்த 9ம் தேதி, முனியப்பன் மற்றும் மதுரை வீரன் சுவாமிகள் செய்ய மண் எடுத்தல் மற்றும் கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 20ம் தேதி, விநாயகர் பூஜை, சண்டா மரம் எடுத்து வந்து நடுதல், முனியப்ப சுவாமி உருவம் எடுத்து வருதல், முனியப்ப சுவாமி வழிபாடு போன்றவை நடைபெற்றன.மேலும், 21ம் தேதி, சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், நேற்றுமுன்தினம் பட்டத்தரசி அம்மன் உருவம் எடுத்து செல்லுதல் நிகழ்ச்சியும் இடம்பெற்றன. நேற்று, மஞ்சள் நீராடுதல், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.