உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கல்லுாரியின் ஆண்டு விழா

எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கல்லுாரியின் ஆண்டு விழா

கோவை;சின்னவேடம்பட்டி, டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியின் ஆண்டு விழா, எஸ்.என்.எஸ்., குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.ஹரிபவனம் ஓட்டலின் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் ராஜூ மற்றும் தமிழ்பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.கல்லுாரியின் தாளாளர் ராஜலட்சுமி மற்றும் செயலர் நளின் விமல்குமார் ஆகியோர், டிசைன் திங்கிங் அடிப்படையில், 'பைவ் பில்லர்' செயல்பாடுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், இந்த வருடத்தின் 'பெஸ்ட் அவுட் கோயிங்' விருதினை பெற்ற, மூன்றாம் ஆண்டு பி.காம்., ஐ.டி., மாணவர் விஷ்ணு பீதாம்பரத்திற்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.கல்லுாரியின் சிறப்புக் கல்வியாளர் ஞானசேகரன், சி.இ.ஓ., டேனியல், முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை