உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுயதொழில் செய்யும் திருநங்கைகளுக்கு உதவி 

சுயதொழில் செய்யும் திருநங்கைகளுக்கு உதவி 

கோவை : கோவையில், 'இன்னர் வீல் கிளப்' சார்பில், திருநங்கைகளுக்கு சமையல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, செட்டிநாடு கோர்ட் யார்டு ஓட்டல் அரங்கில் நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, இன்னர் வீல் கிளப் தலைவர் நாசியா, சுயதொழில் செய்யும் திருநங்கை ஒருவருக்கு, சமையல் உபகரணங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, திருநங்கைகளுக்கான 'சகோதரி' தொண்டு நிறுவனத்தின் தலைவர் கல்கி சுப்ரமணியம் பேசியதாவது:இன்று சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கும் திருநங்கைகளுக்கு உதவும் வகையில், அவர்கள் சுயமாக தொழில் செய்து தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு, சமையல் தொழில் செய்ய தேவையான பாத்திரங்கள், மிக்சி, காஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல பொருட்களை, இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் வழங்கி உள்ளனர். குடும்பத்தாலும், சமூகத்தாலும் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு, இந்த உதவிகள் அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை