உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புறநகர் குறுமைய பூப்பந்தில்  அவினாசிலிங்கம் வாகை 

புறநகர் குறுமைய பூப்பந்தில்  அவினாசிலிங்கம் வாகை 

கோவை:புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவியருக்கான பூப்பந்து போட்டியில், அவினாசிலிங்கம் பள்ளி மாணவியர் வாகை சூடினர். கோவை கல்வி மாவட்டம் புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள், மதர்லேண்ட் பள்ளி சார்பில் பாரதியார் பல்கலை மைதானத்தில் நடத்தது. இதில் பங்கேற்ற அவினாசிலிங்கம் பள்ளி மாணவியர், 14 மற்றும் 19 வயது பிரிவுகளில் முதலிடம் பிடித்து அசத்தினர். 17 வயது பிரிவில் இரண்டாம் இடமும் பிடித்தனர். இதேபோல் மாணவியர் கோ கோ போட்டியில், 17 மற்றும் 19 ஆகிய இரு பிரிவுகளிலும், இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை நளினி, உடற்கல்வி இயக்குனர் வேல்மதி, உடற்கல்வி ஆசிரியர் கோமதி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ