உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாறு நாள் திட்டத்தில் சிறந்த ஊராட்சிகளுக்கு விருது

நுாறு நாள் திட்டத்தில் சிறந்த ஊராட்சிகளுக்கு விருது

அன்னுார்,ஆக. 9--- நுாறு நாள் வேலை திட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட இரண்டு ஊராட்சிகளுக்கு, மத்திய இணை அமைச்சர் விருது வழங்கினார். மத்திய அரசின், 100 நாள் வேலை திட்டம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. தினசரி சம்பளமாக, 319 ரூபாய் வழங்கப்படுகிறது.இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் நலச்சங்கம் சார்பில், நூறு நாள் வேலை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சிகளுக்கு விருது வழங்கும் விழா டில்லியில் ரவிமார்க்கில் நேற்று முன்தினம் நடந்தது.இதில் கால்நடை, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் மத்திய இணை அமைச்சர் சிங் பஹல் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். கோவை மாவட்டத்தில், அன்னுார் ஒன்றியத்தை சேர்ந்த கஞ்சப்பள்ளி ஊராட்சி தலைவர் சித்ரா, பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி தலைவர் லட்சுமணமூர்த்தி ஆகியோருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கிராம ஊராட்சி தலைவர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் முனியாண்டி, ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் பாண்டியன் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விருது பெற்ற ஊராட்சித் தலைவர்களுக்கு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ