உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆ குறுமைய தடகளத்தில் சீறிப்பாய்ந்த மாணவர்கள்

ஆ குறுமைய தடகளத்தில் சீறிப்பாய்ந்த மாணவர்கள்

கோவை;கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 'ஆ' குறுமைய அளவிலான தடகளப்போட்டியில் மாணவர்கள் சீறிப்பாய்ந்தனர். கணபதி சி.எம்.எஸ்., மெட்ரிக்., பள்ளி சார்பில் 'ஆ' குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான, விளையாட்டு மற்றும் தடகளப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் தடகளப்போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தன. போட்டியை, கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார்.மாணவ - மாணவியருக்கு, 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், தொடர்ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதன் 14 வயது பிரிவு மாணவர்களுக்கான 600மீ., ஓட்டத்தில், ஸ்டேன்ஸ் பள்ளியின் பிரகதீஸ் முதலிடம், அபினேஷ் குமார் இரண்டாமிடம் பிடித்தனர். மாணவியர் 19 வயது பிரிவு, 100மீ., ஓட்டத்தில் சி.எம்.எஸ்., பள்ளி தியா முதலிடம், ஸ்டேன்ஸ் பள்ளி சமிக் ஷா இரண்டாமிடம்; 400மீ., ஓட்டத்தில் ஸ்டேன்ஸ் பள்ளி மேகா முதலிடம், சி.எம்.எஸ்., நிவேதா இரண்டாமிடம்; 800மீ., ஓட்டத்தில் சி.எம்.எஸ்., பள்ளி நிவேதா முதலிடம், ஸ்டேன்ஸ் பள்ளி சிவானி இரண்டாமிடம்; மும்முறை தாண்டுதலில், சி.எம்.எஸ்., தியா முதலிடம், ஸ்டேன்ஸ் சமிக் ஷா இரண்டாமிடம் பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ