உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பக்ரீத் பண்டிகை; மாடு விற்பனை விறுவிறு பொள்ளாச்சியில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

பக்ரீத் பண்டிகை; மாடு விற்பனை விறுவிறு பொள்ளாச்சியில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி:பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, பொள்ளாச்சி மாட்டு சந்தையில், 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாடுகள் விற்பனைக்காக பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.இந்நிலையில், நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. வியாபாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு மாடுகளின் வரத்து குறைந்து காணப்பட்டது; 2,500 மாடுகள் மட்டுமே வரத்து இருந்தது. பக்ரீத் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படுவதால், வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.நாட்டு காளை, 55,000 - 60,000 ரூபாய், நாட்டு பசு, 35,000 - 40,000, நாட்டு எருமை, 40,000 - 45,000, முரா, 50,000 - 55,000 ரூபாயும்; ஜெர்சி, 30,000 - 35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.வரத்து குறைந்து காணப்பட்டாலும், விற்பனை நன்றாக இருந்தது. வழக்கமாக, 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும். இன்று, கேரள வியாபாரிகளால், பக்ரீத் விற்பனை களைகட்டியதால், 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ram
ஜூன் 12, 2024 13:50

இந்த பீட்டா என்ற ஒரு அமைப்பு இருந்ததே அது எங்கே, ஒரே நாளில் கோடி கணக்கான கால்நடைகளை கொல்ல போகிறார்களே, இதை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடலாமே. ஹிந்துக்கள் விழா என்றால் உடனடியாக ஓடி வருவார்கள்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ