ரோடு சேதம்
பொள்ளாச்சி - கோவை ரோடு, வடக்கிபாளையம் பிரிவில் ரோட்டின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். இது நீண்ட நாட்களாக சரி செய்யாமல் இருப்பதால், பைக் ஓட்டுநர்கள் கீழே விழுவது வாடிக்கையாகிவிட்டது. இதை விரைவில் சீரமைக்க வேண்டும்.- -ஆனந்த், பொள்ளாச்சி. குப்பை தேக்கம்
பொள்ளாச்சி, நியூஸ் ஸ்கீம் ரோடு, ரங்கசாமி வீதி அருகே ரோட்டின் ஓரத்தில் குப்பையை மூட்டைகளாக கட்டி வைக்கின்றனர். இதனால், அவ்வழியில் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் கடும் துர்நாற்றத்தால் பாதிக்கின்றனர். நகராட்சி அதிகாரிகள் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -சசிகுமார், பொள்ளாச்சி. மேற்கூரையில் புற்கள்
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் மேற்கூரையில் அதிகளவு செடி மற்றும் புற்கள் முளைத்துள்ளது. இதனால் அலுவலகம் அபாய நிலையில் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கட்டடத்தின் மேற்கூரையில் இருக்கும் செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.- -நஞ்சுண்டசாமி, நல்லட்டிபாளையம். கால்வாயில் இறைச்சி
செஞ்சேரி பிரிவு பகுதியில் உள்ள, பி.ஏ.பி., கால்வாயில் கோழி இறைச்சி கழிவுகள் அதிக அளவு கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுசுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் இதை கவனித்து, கால்வாயில் இறைச்சி கழிவு கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -கார்த்திகேயன், செஞ்சேரிபிரிவு. ரோட்டில் மழைநீர்
கிணத்துக்கடவு - வடசித்தூர் செல்லும் வழித்தடத்தில், கொண்டம்பட்டி அருகே வளைவு பகுதியில் ரோட்டில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். சிலர் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டை சீரமைக்க வேண்டும்.-- -பிரபு, கிணத்துக்கடவு. விரைந்து முடிக்கணும்
உடுமலை பைபாஸ் ரோட்டில், மழை நீர் வடிகால் கட்டும் பணி பல மாதங்களாக நடக்காமல் உள்ளது. இதனால், அந்த ரோட்டில் விபத்துகள் நடப்பதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, பணிகளை தொடங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கதிரேசன், உடுமலை. அடையாளம் வேண்டும்
பூலாங்கிணர், முக்கோணம் பகுதியில் ஆனைமலை ரோட்டில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் தெரியவில்லை, இதனால் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மணிமாறன், பூலாங்கிணர். எரியாத தெருவிளக்குகள்
உடுமலை பூமாலை சந்து பகுதியில், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. மாலையில் குழந்தைகளை அவ்வழியாக அனுப்புவதற்கு, பெற்றோர் அச்சப்படுகின்றனர். இருள் சூழ்ந்திருப்பதால், பலரும் குடியிருப்புகளின் அருகில் அமர்ந்துக்கொள்கின்றனர். விளக்குகள் எரிய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- காயத்ரி, உடுமலை. சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, கணக்கம்பாளையம் ரயில்வே கேட் அருகிலுள்ள பகுதிகளில் குப்பைக்கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. திறந்த வெளியில் குப்பைக்கழிவுகள் குவிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியின் சுகாதாரம் முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.- வாசுதேவன், உடுமலை. நகராட்சி கவனத்திற்கு
உடுமலை, ஏரிப்பாளையத்திலிருந்து தாராபுரம் ரோட்டை இணைக்கும் பகுதியில் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவில் நடந்ததுசெல்வதற்கு அச்சப்படுகின்றனர். கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தேவராஜ், உடுமலை. சேறான ரோடு
உடுமலை, தளி ரோடு போடிபட்டி முருகன் கோவில் பஸ் ஸ்டாப்பில், மழை பெய்யும் போது ரோடு சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் இந்த ரோட்டை சரிசெய்ய வேண்டும்.- நாச்சிமுத்து, போடிபட்டி. ரோட்டை விரிவுபடுத்தணும்
உடுமலை, மடத்துார் செல்லும் ரோடு குறுகலாக உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்படுகிறது. ரோட்டை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வகுமார், உடுமலை.