உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேனீ வளர்ப்பு ஒருநாள் பயிற்சி

தேனீ வளர்ப்பு ஒருநாள் பயிற்சி

கோவை:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பில், தேனீ வளர்ப்பு ஒருநாள் பயிற்சி வரும் 6ம் தேதி நடக்கவுள்ளது.இப்பயிற்சியில் தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவை குறித்து, பயிற்சி அளிக்கப்படஉள்ளது.பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், பயிற்சி நாளன்று காலை 9:00 மணிக்கு, வேளாண் பல்கலையில் உள்ள பூச்சியியல் துறையில், அடையாளச் சான்று சமர்ப்பித்து, பயிற்சிக் கட்டணம் 590 ரூபாய் நேரடியாக செலுத்த வேண்டும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி வழங்கப்படவுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு, 0422 -6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை