உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தினம் கல்லுாரிக்கு சிறந்த தொழில்முனைவோர் விருது

ரத்தினம் கல்லுாரிக்கு சிறந்த தொழில்முனைவோர் விருது

கோவை;ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சிறந்த தொழில் முனைவோர் மற்றும் சூப்பர் ஸ்டாட் அப் விருது வழங்கும் விழா, கல்லுாரி கிரேண்ட் ஹாலில் நடந்தது. ரத்தினம் கல்விக்குழும இயக்குனர் சீமா செந்தில் தலைமைவகித்து, நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.கோவை பழமுதிர் நிலையத்தின் நிறுவனர் நடராஜன் மற்றும் சி.இ.ஓ., செந்தில் நடராஜன் பீவி ரேஞ்சர்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் நிறுவனர் பிரபு காந்திகுமார் ஆகியோர், சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை பெற்றனர். பீ லிட்டில் துணை நிறுவனர்கள் காயத்ரி, சூரிய பிரபா, சக்தி பிரியதர்சினி ஆகியோர், சிறந்த சூப்பர் ஸ்டார்ட் அப் விருது பெற்றனர்.சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், தேர்வு பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார்.ரத்தினம் கல்விக்குழுமத்தின் செயலாளர் மாணிக்கம், தி வீக்கெண்ட் லீடர் செய்தி நிறுவனஆசிரியர் வினோஜ்குமார், முதல்வர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி