மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
3 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
3 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
3 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
3 hour(s) ago
கோவை:பில்லுார்-2 திட்டத்தில் தண்ணீர் எடுப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 1ம் திட்டத்தின் வாயிலாக ஓரளவு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி, பில்லுார், ஆழியாறு அணைகளில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி என்ற நிலையில் மழை இல்லாததால், 11 அடியாக குறைந்துள்ளது.பில்லுார் அணையின் நீர்மட்டம், 100 அடி உள்ள நிலையில் தற்போது, 55 அடிக்கும் குறைவாக உள்ளது. கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பில்லுார்-1, 2, திட்டங்கள் பெரும்பாலும் பூர்த்தி செய்துவரும் நிலையில், தினமும், 17.8 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும், பில்லுார்-3 திட்டமும் சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்தது.இதனால், மூன்று திட்டங்களிலும் தினமும், 40 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டது. மழை இல்லாததால் தற்போது அணையின் நீர் மட்டம், 55 அடிக்கும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், பில்லுார்-2 திட்டத்தில் தண்ணீர் எடுப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பில்லுார்-2 திட்டத்தில் இருந்து தண்ணீர் எடுப்பது மூன்று நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குடிநீர் பெறும் சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார், பீளமேடு, சவுரிபாளையம், கணபதி, காந்திபுரம், புலியகுளம், ரத்தினபுரி, சித்தாபுதுார், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு பில்லுார்-1 வாயிலாக ஓரளவு குடிநீர் வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகமும் மாற்று நடவடிக்கைகள் எடுத்துவருகிறது' என்றார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago