உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுந்தராபுரம் அருகே காமராஜர் பிறந்த நாள் விழா

சுந்தராபுரம் அருகே காமராஜர் பிறந்த நாள் விழா

போத்தனூர்:சுந்தராபுரம் அருகே தியாக சுடர் காமராஜ் தேசிய மன்றம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. சுந்தராபுரம் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் நடந்த விழாவிற்கு, கோவை மாவட்ட காங், கமிட்டி துணை தலைவர் துரை தலைமை வகித்தார். அகில இந்திய காங். கமிட்டி தேசிய செயலாளர் மயூரா ஜெயகுமார் காமராஜர் குறித்து பேசினார். தொடர்ந்து, 10ம் வகுப்பு பொது தேர்வில் காமராஜ் நகர் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற ஸ்வேதா, மாதேஸ், நிலா ஸ்ரீ உள்பட, ஐந்து பேருக்கு கேடயம் வழங்கினார். மேலும், 130 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், 30 முதியோருக்கு போர்வை வழங்கப்பட்டன. மதிய உணவு பரிமாறப்பட்டது. மாநகர் மாவட்ட காங், தலைவர் கருப்புசாமி, தெற்கு மாவட்ட காங், தலைவர் பகவதி, மாநகர் பொது செயலாளர் வசந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை