உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிழற்கூரை இன்றி பஸ் நிறுத்தங்கள்: மழை, வெயிலால் மக்கள் பாதிப்பு

நிழற்கூரை இன்றி பஸ் நிறுத்தங்கள்: மழை, வெயிலால் மக்கள் பாதிப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில் இருந்து சுற்றுப்பகுதி வழித்தடங்களுக்குச் செல்லும் ரோட்டில் நிழற்கூரை இல்லாத பஸ் நிறுத்தங்களே அதிகம் உள்ளன. இதனால், பயணியர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சி நகரில் இருந்து, வால்பாறை, மீன்கரை, கோபாலபுரம், ஊஞ்சவேலம்பட்டி, நெகமம், கிணத்துக்கடவு நோக்கிய வழித்தடங்களில், அதிகப்படியான பஸ் நிறுத்தங்கள் உள்ளன.இந்த நிறுத்தங்களில் இருந்து, தினமும், நுாற்றுக்கணக்கான மக்கள், பயணித்தும் வருகின்றனர். ஆனால், பெரும்பாலான நிறுத்தங்களில், பயணியர் நிழற்கூரை கிடையாது.குறிப்பாக, நகராட்சி, ராஜாமில்ரோடு, திடல், ஓம்பிரகாஷ், தங்கம், காந்திபுரம், வஞ்சியாபுரம் பிரிவு, தேர்முட்டி, சின்னாம்பாளையம், பாலிடெக்னிக், மகாலிங்கபுரம் சந்திப்பு என, நிழற்கூரை இல்லாத பஸ் நிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில், பயணியர் பாதுகாப்பாக நிற்க இடமின்றி கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பஸ் நிறுத்தங்களில், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், நிழற்கூரை அமைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் கூறியதாவது:பல பஸ் நிறுத்தங்களில், நிழற்கூரை கிடையாது. மழை மற்றும் வெயிலின்போது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் பாதிக்கின்றனர். மரத்தடியிலும், அருகே உள்ள கடைகளிலும் தஞ்சமடையும் நிலை ஏற்படுகிறது.எனவே, தேர்முட்டி, திருவள்ளுவர்திடல் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில், பயணியர் நிழற்கூரை அமைப்பதுடன், பஸ்கள் விபரம் எழுதப்பட்ட பெயர் பலகை அமைக்க வேண்டும். இதனால், புதிதாக, நகருக்கு வந்து செல்வோர் பயனடைவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ